ஆனி உத்தர திருமஞ்சன மகோற்சவமும் தேர் திருவிழாவும்
அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய ஆனி உத்தர திருமஞ்சன மகோற்சவம் 26-06-2022
ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 8 நாள்கள் உற்சவம் நடைபெற்று 9 ஆம் நாள் 04-07-2022
திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும், 05-07-2022 செவ்வாய்க்கிழமை ஆனி உத்தர திருமஞ்சன திருவிழாவும் தீர்த்தோற்சவமும்
நடைபெற திருவருள் கூடியுள்ளது.
இந்த ஆண்டு எம்பெருமான் திருத்தேரில் ஏறி வீதி வழியே வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். உற்சவ காலங்களில் அடியார்கள் திரண்டு வந்து எம்பெருமானின் சிறப்பு பூசைகளில் கலந்து கொண்டு, அருள்பெற்றுச் செல்லுமாறு வேண்டுகின்றோம்.
இந்த திருவிழாக் காலங்களில் தினமும் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவதற்காக முனைவர் பேராசிரியர் திரு வேலாயுதம் சங்கரநாராயணன் (சேலம் பன்னிரு திருமுறை பகுப்பாய்வு மையம்) அவர்கள் வருகை தரவுள்ளார்.