Thiyagaraja Aradhana 2026

Thiyagaraja Aradhana 2026

கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளைப் போற்றும் வகையில் நடத்தப்படும் தியாகராஜ ஆராதனை திருவிழாவின் 
 
தோற்றம்: தியாகராஜ சுவாமிகள் 1847-ஆம் ஆண்டு புஷ்ய பகுல பஞ்சமி அன்று திருவையாறில் ஜீவ சமாதி அடைந்தார். அவரது சீடர்கள் அவர் மறைந்த தினத்தில் ஆண்டுதோறும் ஆராதனை செய்யத் தொடங்கினர்.
  • ஆரம்ப கால வழிபாடுகள்: 1907-ஆம் ஆண்டு வரை, இது ஒரு மதச்சார்பு வழிபாடாக (பூஜைகள் மற்றும் சடங்குகள்) மட்டுமே இருந்தது. அப்போது தில்லையஸ்தானம் ராம ஐயங்காரின் சீடர்களான நரசிம்ம பாகவதர் மற்றும் பஞ்சு பாகவதர் ஆகியோர் இணைந்து வழிபாடுகளை நடத்தி வந்தனர்.
  • இசைத் திருவிழாவாக மாற்றம்: 1908-ஆம் ஆண்டில், இசை கச்சேரிகள் மற்றும் ஹரிகதைகள் சேர்க்கப்பட்டு ஐந்து நாள் இசைத் திருவிழாவாக உருமாறியது.
  • பஞ்சரத்ன கீர்த்தனைகள்: தியாகராஜ ஆராதனையின் மிக முக்கியமான அம்சம், ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து தியாகராஜர் இயற்றிய ஐந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒரே குரலில் பாடி அஞ்சலி செலுத்துவதாகும்.
  • இம்முறையும் எமது ஆலையத்தில் பஞ்சரத்தின கீர்த்தி Vidhushi  Dr.Nithyashree Mahadevan அவர்களுடன் லண்டன் வாழ் பிரபல இசைக் கலைஞர்கள், இசை ஆசிரியர்கள், கலை மாணவர்கள், இசைப் பிரியர்கள் அனைவரும் இணைந்து ஆராதனை செய்ய இருக்கிறார்கள். நீங்களும் சங்கீத இசைப் பிரியர்களாயின் இணைந்து கொள்ளுங்கள்.

    Venue:

    Sithambareswarar Temple

    Saiva Munnetta Sangam UK

    2 Salisbury Road

    Manor Park

    London E12 6AB

     

  • Date: Sunday 22.02.2026

    Time: from 4.30 pm onwards

  • Please do not park your vehicle in the Salisbury Road as 24h Residential parking.

  • Free car parks are available in opposite side to Salisbury Road, Carlton Road, Clarence Road, Albany Road, Wentworth Road, Cumberland Road, Durham Road


Published By: Administrator Published Under: Sithambareswarar Temple Published On: 29 Jan, 2026