40 இல் திருமணங்கள் 40

40 இல் திருமணங்கள் 40

சங்கம் ஆரம்பித்து இந்த ஆண்டு 40 ஆவது ஆண்டைக் குறிக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட 40 இல் திருமணங்கள் 40 என்ற திட்டத்தின் முதல் அம்சமாக இறைவனுக்கு ஒரு திருக்கல்யாணம் எமது ஆலயத்தில் சென்ற 05.08.17 மாலை 5.30 முதல் வெகு சிறப்பாக நடைபெறத்தது.

எமது இந்த திட்டத்திட்கு ஆதரவு தந்த அனைத்து உள்ளங்களையும் அழைக்கப்பட்டு அனைவருக்கும் சங்கல்பம் செய்து அருகரிசி மூலமாக ஆசிர்வாதம் எடுக்கப்பட்டது. ஆசிர்வாதம் எடுக்கப்பட்ட அருகரிசியானது இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு நடைபெறும் திருமணங்கள் அனைத்திலும் இவ்வரிசியால் குருக்கள் மூலம் மணமக்களுக்கு ஆசிர்வதிக்கப்படவுள்ளது.  

திருக்கல்யாணம் பன்னீர் தெளித்து எல்லோரையும் வரவேற்றதுடன் திருமணம் செய்து வீற்றிருக்கும் இறைவனுக்கும்  நடன விருந்தும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடன விருந்தை சந்தா அன்னபூரணி நடன ஆசிரியரின் மாணவிகள் செல்வி. ஜெயலஷ்மிதா ஸ்கந்தமூர்த்தி, செல்வி கிருத்திகா திரு, செல்வி.மதுமிதா ஈஸ்வரதாஸ், செல்வி. திவ்யா உதயகுமார் அவர்களும் வெகு சிறப்பாக நடனத்தை வழங்கி எல்லோரது பாராட்டையும் பெற்றனர்.

நிகழ்ச்சி சிறந்த விருந்துபசாரத்துடன் பலகார பைகளும் கொடுக்கப்பட்டன

 

திருக்கல்யாண நிகழ்ச்சியை youtube மூலம் பார்க்கலாம்

திருக்கல்யாணம் பகுதி 1
திருக்கல்யாணம் பகுதி 2
திருக்கல்யாணம் நடன விருந்து

40ல் திருமணங்கள் 40 திட்ட திருமணங்களுக்கான அழைப்பிதழ்

View more details on PDF

Published By: Administrator Published Under: Overseas Projects Published On: 18 Aug, 2017