இலங்கையில் கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக நாளாந்த தொழில் இழந்த குடும்பங்களுக்கு சங்கம் நிவாரணம்

இலங்கையில் கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக நாளாந்த தொழில் இழந்த குடும்பங்களுக்கு சங்கம் நிவாரணம்

Project Amount : GBP 9000.00

சங்கம் சென்ற 26.03.20 அன்று கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தினால் நாளாந்த தொழில்களை இழந்த பல குடும்பங்களுக்கு உளர் உணவு நிவாரம் வழங்க ஆரம்பித்தது . இதுவரை கிடைத்த நன் கொடைகளின் படி சுமார் 1800 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி இருக்கிறோம். எமக்கு நன்கொடைகள் கிடைப்பதன் படி ஒவ்வொரு திட்டமாக ஒவ்வொரு கிராமங்களுக்கும் செயல் படுத்தி வருகிறோம். எமது திட்டங்களை இலங்கையில் செய்வதட்கு உள்ளூரில் உள்ள சில ஸ்தாபனங்கள் எம்முடன் இணைந்துள்ளன. 

இதுவரை 12 திட்டங்கள் எமது வெளிநாட்டு திட்ட பிரிவினூடா நடத்திவருகிறோம். மற்றைய 3 திட்டங்கள் எமது யோகா பிரிவினூடாக செய்து வருகிறோம். 

இந்தத் திட்டங்கள் யாவும் இன்றுடன் (02.05.20) நிறைவுக்கு வருகிறது. எமது திட்டங்கள் இனிதே வெற்றி  பெற எமக்கு நன்கொடை தந்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு எமது திட்டத்தில் பின்னின்று செயல்பட்ட அனைத்து ஆட்சிக்கு குழு உறுப்பினர்களுக்கும் இலங்கையில் எமக்காக  பணிபுரிந்த அனைத்து ஸ்தாபனங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

எமது திட்டங்கள் சம்பந்தமான விபரங்களை அறிந்து கொள்ள (இங்கே அழுத்தவும்)

 

Mrs. Puvaneswary Sabaratnam

Overseas Project Secretary


Published By: Administrator Published On: 04 Apr, 2020

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events