மாலை மாருதம் 2017

மாலை மாருதம்  2017

சைவ முன்னேற்றச்  சங்கம், நால்வர் மூத்தோர் நிலையம் பெருமையுடன்  வழங்கிய  'மாலை மாருதம் 2017' மண்டபம் நிரம்பிய பார்வையாளர் மத்தியில் நிகழ்ச்சி வைகாசித் திங்கள் 20ம் நாள் Woodfordbridge High School இல் சிறப்பாக நடைபெற்றது. Ilford, Manor Park, Walthamstow, Kingston, Collierswood,Harrow ஆகிய இடங்களைச் சேர்ந்த மூத்தோர் நிலைய அங்கத்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு இவ் விழாவிற்கு மெருகூட்டினர். நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, நாட்டிய நாடகம், சொல்லாடல் என மூத்தோரும், பரதநாட்டியம், புல்லாங்குழல், மிருதங்கம் என இளைய சமூகத்தினரும் தொடர்ச்சியாக அரங்கில் ஏறி பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தனர் சிந்திக்கவும் வைத்தனர். பிரதம விருந்தினர்களாக திரு.அரசகோன் அகிலன், திருமதி.கலைச்செல்வி அகிலன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக LYCA நிறுவன உரிமையாளர் திரு.சுபாஸ்கரன் அல்லிராஜா குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். சங்கத்தின் நீண்ட கால உறுப்பினர் திரு.கனகசபையும் அவரது மனைவியாரும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. Ilford North பாராளுமன்ற உறுப்பினர் திரு.Wes Streeting மற்றும் கவுன்சிலர் ஜெயரஞ்சன் ஆகியோரது வருகையும் மூத்தோருக்கு மகிழ்ச்சி அளித்தது.முருகன் ஆலய ஸ்ரீ நாகநாதசிவம் குருக்கள் அவர்களும் கற்பக விநாயகர் ஆலய வசந்தன் குருக்கள் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சுருக்கமாகப் பேசி  சபையோர் மனம் கவர்ந்தனர். அஞ்சு ராமதாஸ், ராணி சுரேன் இருவரும் நிகழ்ச்சியை இனிதே தொகுத்தளித்தனர். Barclays வங்கி உதவியுடன் அதிர்ஷ்ட சீட்டு நடாத்தப்பட்டது. மொத்தத்தில் ஒரு சத்தான முத்தமிழ் நிகழ்ச்சியைக் கண்டு களித்த உணர்வுடன் மண்டபம் விட்டு வெளியேறினர் பார்வையாளர்கள். மூத்தோர் நிலைய செயலாளர்  திருமதி.சரோஜா கனகசபேசன் மற்றும் மூத்தோர் நிலைய அங்கத்தவர்கள் அனைவர்க்கும் பெருவெற்றியாக அமைந்தது மாலை மாருதம் 2017. வெற்றிக்கு பின்னால் அமைதியாக செயல்படும்  சங்கத்தின் பணிகள் தொடரும்.Published By: Administrator Published Under: Seniors Centre Published On: 23 May, 2017

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media