Sivaneri Arappani Mandram Building Project

கல்முனை சிவநெறி அறப்பணி மன்றம் சிறுவர்களுக்கு சைவ சமயக் கல்வியை கோவில் வளாகத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் கீழ் நடத்திவந்தது. அண்மையில் இடம்பெற்ற அடை மழை காரணமாக அந்த ஆலமரம் விழுந்ததன் காரணமாக மாணவர்கள் நிழல் தேடி கோவிலுக்குள் பாடங்களை கற்று வந்தார்கள். பெண் ஆசிரியர்கள் கோவிலுக்குள் போக இயலாத காலங்களில் வகுப்புக்கள் ஒழுங்கு முறையாக நடாத்தப்படாமல் போகவே சிவநெறியை அறப்பணி மன்றம் எம்மிடம் உதவியை நாடி வகுப்புகளை தொடர்ந்து நடத்த ஒரு அறநெறி பாடசாலையை கட்டித் தருமாறு கேட்டதையடுத்து சங்கம் 6,00,000.00 ரூபா செலவில் ஒரு அறநெறிப் பாடசாலையை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.
இந்த திட்டத்துக்கு ஆதரவு தர விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.