இலங்கை தரம் 5 புலமைப் பரிசில் மாணவர்களுக்கான இலவச மாதிரிப் பரீட்சை 2021

சைவ முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்படும் தரம் 5 இற்கான மாதிரிப் பரீட்சை இந்த ஆண்டும் இலங்கையில் மூன்று கல்வி வளையங்களில் இப்போது நடந்து வருகிறது.இந்த ஆண்டு நாம் தெரிவு செய்த மூன்று வளையங்களாக திருக்கோவில் கல்வி வளையம், பதுளை கல்வி வளையம், முல்லைத்தீவு கல்வி வளையங்களில் 142 வறுமைக்கு கோட்டின் கீழ் உள்ள பாடசாலைகளில் மொத்தம் 4862 மாணவர்கள் நேரடியாக பயன் பெற உள்ளார்கள்.
எமது பரீட்சைத்தாள்கள் உதவி கல்விப் பணிப்பாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் மூன்று கல்வி வளைய அலுவலகங்களில் சென்ற புதன்,வியாழன், வெள்ளி தினங்களில் நடைபெற்றது. அவற்றின் விபரங்களை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.
வலையக் கல்வி அதிகாரிகளின் உரைகள்
உங்கள் மாணவர்களுக்கும் எமது பரீட்சைத் தாள்களை பெற விரும்பினால் கீழ் உள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.