Corona அச்சுறுத்தல் காரணமாக எமது ஆலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது

தற்சமயம் நம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் Corona virus Outbreak காரணமாக பிரித்தானிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவும், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைப்படியும், Corona virus தொற்று நோய் பரவுவதைத் தடுக்குமுகமாக எடுக்கப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாகவும், பக்தர்கள், சிவாச்சாரியர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் 05-11-2020 முதல், மறு அறிவிப்பு வரை சைவ முன்னேற்றச் சங்கம் சம்பந்தப்பட்ட யோகா நிலையம், ஆலயம் ஆகிய பொதுச் சேவைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நால்வர் தமிழ்ப் பாடசாலை, நால்வர் மூத்தோர் சங்கம் ஆகியன வளமை போல Zoom வாயிலாக நடை பெறுகிறது.
அந்திமக் கிரியைகள்பின் வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Sangam 0208 514 4732, Kurukkal 07757 505477
அதே வேளையில், ஆலயத்தில் நான்கு சாம பூஜை வழிபாடுகள் ஆகம சாஸ்திரப்படி தொடர்ந்து நடைபெறும் என்பதனையும் அறியத் தருகிறோம்.