Temporary Closure of SMS(UK) due to Coronavirus Outbreak

Temporary Closure of SMS(UK) due to Coronavirus  Outbreak

தற்சமயம் நம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் Corona virus Outbreak காரணமாக பிரித்தானிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவும், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைப்படியும், Corona virus தொற்று நோய் பரவுவதைத் தடுக்குமுகமாக எடுக்கப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாகவும், பக்தர்கள், சிவாச்சாரியர்கள்  தொண்டர்கள்  மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் 21-03-2020 முதல், மறு அறிவிப்பு வரை  சைவ முன்னேற்றச்  சங்கம்  சம்பந்தப்பட்ட; நால்வர் தமிழ்ப் பாடசாலை, நால்வர் மூத்தோர் சங்கம்அந்திமக் கிரியைகள், யோகா நிலையம், ஆலயம் ஆகிய பொதுச் சேவைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

அதே வேளையில், ஆலயத்தில் நான்கு சாம பூஜை வழிபாடுகள் ஆகம சாஸ்திரப்படி தொடர்ந்து நடைபெறும் என்பதனையும் அறியத் தருகிறோம்.

 

எங்களுடைய உலக மக்கள் அனைவருடைய நலத்திற்கும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் அருள் வேண்டிப் பிரார்த்திப்போம்.

 

நன்றி 
 
திரு.தர்ம இரபீந்திரமோகன்                                                 திருமதி.சறோஜினி சந்திரகோபால் 
தலைவர்                                                                              பொதுச் செயலாளர்.
Saiva Munnetta Sangam (UK)                                     Saiva Munnetta Sangam (UK)
 
ஒத்தி வைக்கப்பட்ட நிகழ்வுகள் 
 
- 28.03.2020 அன்று நிகழ்வதாக  இருந்த "நால்வர் தமிழ் கலை நிலையம்" மாணவர்களது கலை விழா 
- 23.05.2020 அன்று நிகழ்வதாக  இருந்த மூத்தோர் நிலையம், "மாலை மாருதம் "
- மேலும், சங்க மண்டபத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் இடம்பெறும் "மூத்தோர் ஒன்றுகூடல்" 
- மூத்தோர் நிலைய அன்னையர் தின நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
யோகா நிலைய வகுப்புக்கள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது
- நால்வர் தமிழ் கலை நிலைய ஞாயிற்றுக் கிழமை வகுப்புகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது
- எமது ஆலைய தினசரி பூசைகளும் நிகழ்வுகளும்  21.03.20 அன்றிலிருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
 



Published By: Administrator Published Under: Sangam Published On: 11 Mar, 2020

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events